Mobile

இந்தியாவில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனை இன்று வெளியிட்டுள்ளது. இந்த கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 இன்பினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்!

சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் ARM மாலி-G52 2EEMC2 GPU,  6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி eMMC 5.1 மெமரி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1 கோர் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 13 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் ஆடியோ அளவாக 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவாக  டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி என்று கொண்டால் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும்  15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

Related posts

முதல் முறையாக விற்பனையினைத் துவக்கிய ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அதிரடியாக அறிமுகமானது Vivo Z1x ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரூ.35,999யில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்5இ.!

TechNews Tamil