Samsung Galaxy A20s ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 SoC மூலம் இயங்கும் தன்மை கொண்டது.
மேலும்
இது 64 ஜிபி வரையிலான இன்டெர்னல் சேமிப்பு கொண்டதாக உள்ளது.
1. கேலக்ஸி ஏ20எஸ் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட வகையின் விலை- ரூ.11,999
2. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட வகையின் விலை- ரூ.13.999

இது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான ஒன் யுஐ
கொண்டுள்ளது. 6.5 இன்ச் அளவிலான எச்டி உடன் 720×1560 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. இது ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 SoC மூலம் இயங்குகிறது.
சாம்சங்
கேலக்ஸி ஏ20எஸ் பின்புறத்தில் ட்ரிபிள்
கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் கொண்ட இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
4ஜி
வோல்டிஇ,
வைஃபை 802.11 பி, ப்ளூடூத் வி 4.2, போன்றவைகளும் இதில்
உள்ளது. இது 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.