Samsung Galaxy A20s ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனுக்கு தற்போது ரூ.1000 வரை விலைகுறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
1. கேலக்ஸி ஏ20எஸ் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட வகையின் விலை- ரூ.11,999 (1000 ரூபாய் விலைக்குறைப்பு)= தற்போது ரூ.10,999
இது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான ஒன் யுஐ கொண்டுள்ளது. 6.5 இன்ச் அளவிலான எச்டி உடன் 720×1560 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. இது ஆக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 SoC மூலம் இயங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் கொண்ட இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி, ப்ளூடூத் வி 4.2, போன்றவைகளும் இதில் உள்ளது. இது 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது.