இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A12 ஸ்மார்ட்போன் ஆனது இன்று வெளியாகியுள்ளது. இந்த கேலக்ஸி ஏ 12 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி A12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் HD உடன் 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் PLS TFT டிஸ்ப்ளே 20: 9 விகித அளவாகக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி A12 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு மற்றும்1TB வரை நீட்டிக்கக் கூடிய வசதியினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A12 ஸ்மார்ட்போன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5,000 mAh பேட்டரி கொண்டுள்ளது.
கேமரா என்று கொண்டால் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 எம்பி ஆழ சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 8MP சென்சார் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி/ஜி/என், ப்ளூடூத் வி 5, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூஎஸ்பி டைப்-சி கொண்டுள்ளது.