Mobile

விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்!!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினையும் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்எஏச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரூ.29,999 விலையில் அறிமுகமானது Samsung Galaxy A71 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

இங்கிலாந்தில் அறிமுகமானது ஹானர் 8 எஸ் (2020) என்ற ஸ்மார்ட் போன்!!

TechNews Tamil