Mobile

சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனை 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டது. தற்போது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் சர்வதேச அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

சாம்சங்க் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080 பிக்சல் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்!!

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர் வசதி கொண்டுள்ளது. மேலும் இயங்குதளத்தைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இது 5000 எம்எஏச் பேட்டரி கொண்டதாகவும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினை கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ஏப்ரல் 22 ஆம் தேதி அறிமுகம் அறிமுகமாகவுள்ள மோட்டோரோலா எட்ஜ்.!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள விவோ Y1s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Electric Blue வண்ணத்தில் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil