Mobile

விரைவில் களம் இறங்க ரெடியாகிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ12!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமன சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ12 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகின்றது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் குறித்த சில விவரங்கள் கசிந்துள்ளன.

அதாவது இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட் மூலம் இயங்கும் தன்மை கொண்டிருக்கலாம். இது 3ஜிபி ரேம் கொண்டதாகவும் மேலும் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்கும் தன்மை கொண்டிருக்கலாம்.

கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் ப்ளூ வண்ணங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இரண்டு உள்ளடக்க மெமரி விருப்பங்களில் வெளியாகலாம்.

விரைவில் களம் இறங்க ரெடியாகிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ12!

இது 6.4 இன்ச் எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி ஓஎல்இடி டிஸ்ப்ளேவினையும், 720 x 1,560 பிக்சல் தீர்மானத்துடன் கொண்டதாகவும் இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியினைக் கொண்டதாகவும் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டிருக்கலாம் என்றும் 4000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

கேமராவினைப் பொறுத்தவரை 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் ஆழ சென்சார், 8 மெகாபிக்சல் பஞ்ச்ஹோல் டிஸ்ப்ளே போன்றவற்றினை கொண்டிருக்கும்.

Related posts

ஜனவரி 7 ஆம் தேதி களமிறங்கும் ரியல்மி எக்ஸ்50!!

TechNews Tamil

பிரேசிலில் களம் இறங்கியது சாம்சங் கேலக்ஸி எம்21எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சிங்கப்பூரில் 48 எம்பி ரியர் கேமரா வசதியுடன் ஒப்போ ரெனோ5 Z 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil