Mobile

விரைவில் அறிமுகமாகத் தயார் நிலையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலை டிசம்பர் மாதவாக்கில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. இந்த ஏ 12 ஸ்மார்ட்போன் குறித்து தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளன.

சாம்சங்க் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் மாதிரி எண் SM125F/DSN கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. சாம்சங் ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஆதரவினைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ பி 35 செயலியினைக் கொண்டதாக இருக்கும். மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, வெள்ளை, சிவப்பு மற்றும் ப்ளூ வண்ணங்களைக் கொண்டதாக உள்ளது.

விரைவில் அறிமுகமாகத் தயார் நிலையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரை 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இரண்டு உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டதாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

பேட்டரிவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ 11 ஸ்மார்ட்போன் ஆனது 4000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 12 எல்சிடி டிஸ்ப்ளே பேனலைக் கொண்டுள்ளது, டிஸ்ப்ளேவினைப் பொறுத்தவரை செல்ஃபி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கொண்டிருக்கும்.

Related posts

சீனாவில் விற்பனையைத் தொடங்கிய Realme X2!

TechNews Tamil

சர்வதேச சந்தையில் அறிமுகமானது நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் வெளியாகியது ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ ரெனோ 5 5ஜி ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil