சாம்சங்க் நிறுவனம் தனது Samsung Galaxy A11 ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த சில விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதாவது, Samsung Galaxy A11 ஸ்மார்ட்போன், 6.4 இன்ச் எச்டி உடன் 720x1560 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளேவினைக் கொண்டிருக்கும். மேலும் இது 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட, 1.8GHz ஆக்டா கோர் பிராசசர் மூலம் இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை இது இன்பில்ட் ஸ்டோரேஜ் 32 ஜி.பி கொண்டதாக உள்ளது, மேலும் இது மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கம் செய்யக் கூடியதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது, பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பினைக் கொண்டுள்ளது. அதாவது இது பின்புறத்தில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் முன் கேமராவினைக் கொண்டு உள்ளது. இது 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது பின்புற கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது.