சாம்சங் கேலக்ஸி A10s 3ஜிபி ரேம் வேரியண்ட் இந்தியாவில் இன்று முதல் விற்பனை ஆகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி A10s 3ஜிபி +32ஜிபி வகையின் விலை ரூ.10,499 ஆகும்.
இந்த போனை இன்று முதல் ஆன்லைன் தளங்களிலும், ஸ்டோர்களிலும் பெற முடியும்.
சாம்சங் கேலக்ஸி A10s, 2ஜிபி வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியது. அதன் ஆரம்ப விலையாக, ரூ.9,499 ஆக உள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட் போனில், 13மெகா பிக்செல் பிரைமரி சென்சாரும், 2 மெகா பிக்செல் செகண்டரி சென்சாருமாக பின்பக்கம் டூயல் கேமராவும் உள்ளது. முன்பக்கம் 8 மெகா பிக்செல் சென்சார் கொண்டுள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஆனது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மையானது.
இந்த போன் 720 x 1520 பிக்சல்கள் உடன் 6.2 இன்ச் அளவிலான எச்டி+ இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஆக்டா கோர் பிராஸசர் கொண்டதாக இது உள்ளது.