சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டா கோர் பிராசஸர் கொண்டதாக உள்ளது.
இது 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி கொண்டதாக உள்ளது, மேலும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 5 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குறித்த விலை விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் அம்சங்களை வைத்துப் பார்க்கையில் இது மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.