Mobile

இன்னும் 2 நாளில் அறிமுகமாகிறது சாம்சங் ஏ 21 எஸ் ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் அதன் ஏ 21 எஸ் ஸ்மார்ட்போனை ஜூன் 17 ஆம் தேதி வெளிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.55 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இந்த கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் எக்ஸிநோஸ் 850 பிராசஸர் வசதியினையும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகவும் உள்ளது.

இன்னும் 2 நாளில் அறிமுகமாகிறது சாம்சங் ஏ 21 எஸ் ஸ்மார்ட்போன்!!

கேமராவைப் பொறுத்தவரை இந்த கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 13எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

இந்தியாவில் அறிமுகமானது சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் களம் இறங்கிய லெனோவா கே 12 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் களம் இறங்கவுள்ள சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil