Mobile

ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் 108MP கேமரா ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் அதன் 108MP கேமராவை வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனம், தனது செல்பீ கேமராவில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை இணைத்ததும் உடனே மீதமுள்ள அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் அந்த அம்சத்தை தனது செல்பீ கேமராக்களில் சேர்க்க கட்டாயப்படுத்தப்பட்டன.

அதோடு முடியாமல், டூயல் கேமரா, ட்ரிபிள் கேமரா என தொடங்கி பாப்-அப் செல்பீ கேமரா வரை நீள்கிறது இந்த “கட்டாய அம்சங்களின்” பட்டியல். 

தற்போது சாம்சங் அதன் 108 மெகாபிக்சல் அளவிலான கேமராவை அறிமுகம் செய்தால், நிச்சயமாக அது க்வாட் கேமரா அமைப்பின் கீழ் தான் இடம்பெறும்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் 108MP கேமரா ஸ்மார்ட்போன்!

இதன் விளைவாக, ட்ரிபிள் கேமரா அமைப்பை முயற்சி கூட செய்து பார்க்காத நிறுவனங்கள், நேரடியாக நான்கு கேமரா அமைப்பை கையாள வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுவார்கள். 


ஏற்கனவே 48MP Camera ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் ஒரு சில சாதனங்கள் சந்தையை அடைந்து விட்டதால், சியோமி அதன் அடுத்த Realme மற்றும் Redmi ஸ்மார்ட்போன்களில் 64MP அளவிலான கேமராக்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின. 


அதற்கு அடுத்தபடியாக சியோமி 100MP அல்லது 108MP Camera ஸ்மார்ட்போனை வெளியிடும் என்கிற தகவல் தீயாக பரவியது. அந்த ஸ்மார்ட்போனில் சியோமி, சாம்சங் நிறுவனத்தின் ISOCELL சென்சாரை பயன்படுத்தும் என்றும், அது வரவிருக்கும் Mi MIX 4 ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்றும் வதந்திகள் வெளியாகின.

தற்போது, சாம்சங் நிறுவனத்தின் கேமரா பிரிவு அந்த வதந்திகளை உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று நிறுவனத்தின் 108MP சென்சார் அறிமுகமாகும் என்று அறிவித்துள்ளது. 



Related posts

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஒன் 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சர்வதேச சந்தையில் போக்கோ எப்4 ஜிடி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil