கொரோனா வைரஸ் ஒருபுறம் உயிர்களைக் காவு வாங்கி வருகிறது, மறுபுறம் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் வேலைபார்ப்போர் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது இதனால் சிலர் வீடுகளில் இருந்து வேலைபார்க்கும் WORK FROM HOME என்ற முறையில் தொடர்ந்து வேலைகள் செய்து வந்தாலும், பலர் வேலையினை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் வேலையினை இழந்தோருக்கு சில நிறுவனங்கள் வேலை வாய்ப்பினை வழங்கி வருகின்றன. அந்தவகையில், தற்போது யூகேவினைச் சார்ந்த ஆன்லைன் நிறுவனமான OnBuy ஒரு வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.

அதாவது, டிவி பார்த்தால் ஊதியம் தரப்படும் என்ற டெக் மாஸ்டர் வேலையினை வழங்குவதாய் அறிவித்துள்ளது. அதாவது சம்பளம் வாங்கிக்கொண்டு டிவி பார்க்கலாம்.
அதாவது டெக் மாஸ்டர் பணிக்கு கூர்மையான பார்வையும், கருத்துகளை எழுத்து வடிவில் பதிவிட தெரிந்திருக்க வேண்டும்.
அதாவது தொலைக்காட்சிகள், கேமராக்கள், ஸ்மார்ட் வாட்சுகள் போன்ற மின்னணு சாதனங்களை முழுமையாக ஆராய்ந்து குறைநிறைகளை கூற வேண்டும். விண்ணப்பதாரர்கள் வீட்டில் இருந்தபடியே இதனை செய்து கருத்துகளை அனுப்பினால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் பல தயாரிப்புகள் வழங்கப்படும்.
மேலும் இந்த வேலைக்கு அனுபவம் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.