Gadgets

ரூ. 34,999 விலையில் அறிமுகமான சியோமி Mi ஸ்மார்ட் டிவி!!

சியோமி நிறுவனம் தற்போது Mi டிவி 4X 55 இன்ச் 4K ஸ்மார்ட் டி.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது.

  1. Mi டிவி 4X மாடலின் விலை – ரூ. 34,999

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஹெச்.டி.ஆர். 10 வசதி கொண்டுள்ளது. மேலும் இது 55 இன்ச் 3840×2160 பிக்சல் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

இந்த டிவியானது 20 வாட் ஸ்பீக்கர்கள், மற்றும் டி.டி.எஸ். ஆடியோ சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும் இது அம்லாஜிக் கார்டெக்ஸ் குவாட்கோர் ஏ53 பிராசஸர் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

ரூ. 34,999  விலையில் அறிமுகமான சியோமி Mi ஸ்மார்ட் டிவி!!

மேலும் 2 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. பேட்ச்வால் 2.0 மற்றும் ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

மேலும் இணைய பொழுதுபோக்கு சேவையான நெட்ஃப்ளிக்ஸ், பிரைம் வீடியோ போன்ற வசதிகளும், டேட்டா சேவர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இணைப்பினைப் பொறுத்தவரை வைபை, ப்ளூடூத், 3 x HDMI, 2 x USB, Ethernet H.264, Real, MPEG1/2/4 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

முன்பதிவினைத் துவக்கிய மீடியாபேட் எம்5 லைட் சாதனம்!

TechNews Tamil

முதல் ஸ்மார்ட் டிவியை வெளியிட தயாராக உள்ள ரெட்மி டிவி

TechNews Tamil

அமெரிக்காவில் களம் இறங்கிய ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன்!!

TechNews Tamil