விவோ நிறுவனத்தின் வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பினைப் பெற்றது. வாடிக்கையாளர்களும் இதில் உள்ள தொழில்நுட்பங்களை கருத்தில்கொண்டு அதிக அளவில் ஆர்வத்துடன் வாங்கி வந்தனர்.
இந்த வி17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 2000 தள்ளுபடியாக அறிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வகையில் விவோ வி17 ப்ரோ 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல்களுக்கு ரூ. 2000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 29,990 என்ற விலைக்கு அறிமுகம் ஆனது. இது 6.44 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1080×2400 பிக்சல்கள் கொண்டதாக உள்ளது.
இது சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினை கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 45 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. இரண்டாவது சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவுகளைப் பொறுத்தவரை 4ஜி எல்.டி.இ., ப்ளூடூத், வைபை, யு.எஸ்.பி. டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இது 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டதாக உள்ளது.