சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் கடந்தமாதம் ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போனுக்கு தற்போது ரூ.1000 விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை – ரூ.14,999
ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை -ரூ.13,999
இந்த ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.53′ இன்ச் உடன் 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது, அதாவது இது ஆண்ட்ராய்டு 9பை ஆதரவைக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்ற நான்கு கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
பேட்டரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி 5.0, ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.