புமா நிறுவனம் தற்போது முதல் முறையாக ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் ஆகியுள்ளது.
1. புமா ஸ்மார்ட்வாட்ச் விலை -ரூ. 19,995
இந்த ஸ்மார்ட்வாட்ச் தற்போது அதன் விற்பனையினை புமா விற்பனை மையங்களில் துவக்கியுள்ளது. மேலும் நிறுவனத்தின் சொந்த வலைதளத்திலும், ஃப்ளிப்கார்ட் வலைதளத்திலும் பெற முடியும்.
தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் தற்போது அறிமுகம் ஆகியுள்ளது.
புமா ஸ்மார்ட்வாட்ச் மாடல் கூகுள் வியர் ஒ.எஸ். கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளதாக உள்ளது. இந்த வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் 3100 வியர் பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் இந்த வாட்ச் 1.19 இன்ச் AMOLED 390×390 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளேவினக் கொண்டுள்ளது. மேலும் இந்த புமா ஸ்மார்ட்வாட்ச் மெமரியினைப் பொறுத்தவரை 512 எம்.பி. ரேம், 4 ஜி.பி. இன்டெர்னல் மெமரி கொண்டுள்ளது.
இந்த புமா ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் 4.2, பில்ட் இன் ஜி.பி.எஸ். வசதி, இதய துடிப்பு சென்சார் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் கூகுள் அசிஸ்டண்ட் வசதி, ஸ்விம் ப்ரூஃப் வசதி மற்றும் என்.எஃப்.சி. வசதி, கூகுள் பே மூலம் பேமண்ட் செய்யும் வசதி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.