Mobile

ரூ. 6,299 விலையில் அறிமுகமான லாவா இசட்71 ஸ்மார்ட்போன்!!

லாவா நிறுவனம் இந்தியாவில் இசட்71 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

1.    லாவா இசட்71 ஸ்மார்ட்போன் வகையின் விலை – ரூ. 6,299

மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் கொண்டதாக உள்ளது. இது 1440×720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

ரூ. 6,299 விலையில் அறிமுகமான லாவா இசட்71 ஸ்மார்ட்போன்!!

மெமரியினைப் பொறுத்தவரை 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்டதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

இது IMG பவர் வி.ஆர். ஜி.இ. கிளாஸ் GPU வசதி கொண்டதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது, இது 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் களம் இறங்கியது விவோ வி20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

3 நாட்களுக்கு விற்பனையினைத் துவக்கி உள்ள Redmi 8A Dual ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil