ஐடெல் பிராண்ட் இந்தியாவில் ஏ25 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
- ஐடெல் ஏ25 ஸ்மார்ட்போன் வகையின் விலை – ரூ. 3,999
இந்த ஸ்மார்ட்போன் 5.0 இன்ச் ஐ.பி.எஸ். ஹெச்.டி. டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, இது 1280×720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராஸர் கொண்டு இயங்கும் தன்மையானதாக உள்ளது.
கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 5 எம்.பி. பிரைமரி கேமராவினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 2 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 1 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயனும் தன்மையானதாக உள்ளது.
மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.