ஃபாசில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
1. ஃபாஸில் ஜென் 5 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை – ரூ. 22,995
இந்த வாட்ச்சானது 1.3 இன்ச் வட்ட வடிவம் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது ஸ்னாப்டிராகன் வியர் 3100 கொண்டு இயங்கும் தன்மையானது.
இதன் மூலம் தொலைபேசி அழைப்புகள், SMS, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற அனைத்து வலைதளங்களையும் பயன்படுத்த முடியும். 1 ஜி.பி. ரேம் சேமிப்பு அளவினையும், 8 ஜி.பி. மெமரியினையும் கொண்டுள்ளது.

இதில் இதய துடிப்பு சென்சா் மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாட்ச் பட்டன்களில் மியூசிக், தேதியை பார்ப்பது மற்றும் பல்வேறு இதர அம்சங்களை இயக்கும்படி செட் செய்து கொள்ளலாம்.
மேலும் இது மியூசிக் கண்ட்ரோல், அலாரம் டைமர், ஸ்டாப் வாட்ச் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.
ப்ளூடூத் 4.2 எல்.இ. யினை இணைப்பு ஆதரவாக கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அசரவைக்கும் பல தொழில்நுட்ப வசதியினைக் கொண்டதாக உள்ளது. அதாவது இது இதய துடிப்பு சென்சார், ரேபிட் சார்ஜிங், அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், அலிமீட்டர் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் போன்ற அம்சங்களை கொண்டதாக வெளிவந்துள்ளது.