சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போன் குறித்த டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போன் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் ஆனது.

1. Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போன் வகையின் விலை- ரூ. 2,00,000
இந்த Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போன் ஆனது ராப் அரவுண்ட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரையில் 108 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார், 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்டதாக உள்ளது. மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது.
மேலும் இது 4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.