Mobile

Samsung Galaxy M30s ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000 வரை விலைக்குறைப்பு!!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனுக்கு தற்போது தற்போது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

1.         சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் 4GB RAM வகையின் விலை- ரூ. 12,999 (ரூ.1000 தள்ளுபடி)- பழைய விலை ரூ. 13.999

2.         சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் 6GB RAM வகையின் விலை- ரூ. 16,999 (ரூ.2000 தள்ளுபடி)- பழைய விலை ரூ. 14.999

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ்  ஸ்மார்ட்போன் 6.4 இஞ்ச் full-HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1,080×2,340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

Samsung Galaxy M30s ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000 வரை விலைக்குறைப்பு!!

கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இது ஏஆர்எம் மாலி ஜி72எம்பி3 ஜிபியு செயலி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்ற கேமராக்களைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இது இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது,

Related posts

ஹை-ரெஸ் ஒலி தரம் கொண்டு அறிமுகமாகும் Realme X2 Pro!

TechNews Tamil

இன்னும் ஒரே வாரத்தில் அறிமுகமாகவுள்ள ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஹூவாய் போனை பயன்படுத்தும் ஒன் பிளஸ் விளம்பர தூதர்!

TechNews Tamil