கொரோனா வைரஸ் தொற்றால், இந்தியாவில் 5274 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 700 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும், கொரோனாவுக்கு எதிராகப் போராடி, எப்படியும் தொற்றை சரிசெய்ய வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகின்றது.
அதற்காக பலவித முறைகளில் முயற்சித்தும் வருகிறது, அந்த வகையில் மருத்துவமனையில் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தண்ணீர், உணவு மாத்திரை மருந்து போன்றவைகள் போன்றவற்றினை வழங்குவதற்கு ரோபோக்களை ஈடுபடுத்த திட்டமிட்டனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது ஐஐடியில் எல்இடி சார்ந்து இயங்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த இயந்திரத்தின் மூலம் பொது இடங்களில் உள்ள கிருமிகள்மீது மருந்து தெளிக்க முடியும்.
இது வணிக ரீதியாக பார்க்கும்போது ரூ.1000 அளவில் தான் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கர்நாடகா அரசின் வேண்டுகோளை ஏற்று இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இயந்திரத்திற்கான காப்புரிமை பெற்ற பின்னர், இது மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த் இயந்திரத்தினை ரோபோவை கொண்டு இயக்க வைக்க முடிவு செய்துள்ளனர், மேலும் இது 90 சதவீத கிருமிகளை கொன்றுவிடும் ஆற்றல் கொண்டுள்ளது.