ரியல்மி 5 புரோ ஸ்மார்ட்போனுக்கு தற்போது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1. ரியல்மி 5 புரோ 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ரோம் ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 13,999,
2. ரியல்மி 5 புரோ 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ரோம் ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 14,999,
3. ரியல்மி 5 புரோ 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 16,999.
தற்போது இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1000 வரை விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 5 ப்ரோ கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் குவாட் கேமரா கொண்டுள்ளது. மேலும் இது 48 MP முதன்மை சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார், இரண்டாம் நிலை 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள்-லென்ஸ், 2 எம்பி மூன்றாம் டெப்த் சென்சார், 2MP நான்காவது மேக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது.
மேலும் இது 6.3 அங்குல FHD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 712 SoC கொண்டு இயங்குவதாய் உள்ளது, மேலும் 4035mAh பேட்டரி வசதி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.