பி.எஸ்.என்.எல் ஆனது ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியாக அதிரடி ஆஃபர்களை வழங்கிவருகிறது.
பி.எஸ்.என்.எல் சமீபத்தில், தனது போஸ்ட் பெய்டு பிளான்களில் அதிக அளவில் பிளான்களுக்கு சலுகைகள் வழங்கியது, அதன்பின்னர் மீண்டும் ஜியோவுக்கு போட்டியாக, தனது பழைய பிளான்களை மீண்டும் கொண்டுவந்தது.
சில மாதத்திற்கு, இது அறிமுக சலுகையாக அதே அளவில் விற்பனையாகும் என்றும், அதன்பின்னர் மீண்டும் 100 கூடுதலாக ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ 899 திட்டமானது அறிமுக சலுகையாக ரூ 799 விலைக்கு வழங்கப்படவுள்ளது. இந்த சலுகையை பெற வேண்டுமானால், செப்டம்பர் 23 க்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இத்திட்டம் 180 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்டது. ஒரு நாளைக்கு 50 எஸ்.எம்.எஸுடன் அன்லிமிடட் கால் வசதியையும் கொண்டுள்ளது. மேலும் ஒருநாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா சந்தாதாரர்களுக்கு மட்டுமே இத்திட்டம் தற்போதைக்கு வழங்கப்பட்டுள்ளது.