சியோமி நிறுவனம் நாளை இந்தியாவில் அதன் ரோபோ வேக்கம் கிளீனர் சாதனத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா ரோபோ வேக்கம் கிளீனர் மாடலின் விலை- இந்திய மதிப்பில் ரூ.20,000 (குத்து மதிப்பாக)
கடந்தமாதம் ரோபோ வேக்கம் கிளீனர் தயாரிப்பின் டீஸரை சியோமி நிறுவனம் அதன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
மேலும் அந்த புகைப்படத்துடன் கேப்ஷனாக, “ஒவ்வொரு நாளும் எத்தனை முறை உங்கள் வீட்டை சுத்தம் செய்கிறீர்கள்? அதை நீங்களே செய்யாமல், அதைச் செய்து முடிக்க வழி இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியுடன், உங்கள் ஸ்மார்ட் ஹோம் தேவைக்கான ஸ்மார்ட் கிளீனிங் தீர்வு நாளை அறிமுகம் செய்யப்படும்”, என்று சியோமி பதிவிட்டுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி தனக்கென்று தனி இடைத்தை தக்கவைத்துள்ளது. அதேபோல், இந்திய ஸ்மார்ட் ஹோம் சாதனங்களின் சந்தையிலும் சியோமி நிறுவனம் தனக்கென்ற ஒரு நிரந்தர இடத்தை பிடிக்கும் என்று நம்பப்படுகிறது. நாளை அறிமுகமாகும் ரோபோ வேக்கம் கிளீனர் சியோமி நிறுவனம் இந்த ரோபோ வேக்கம் கிளீனர் சாதனத்தை நாளை வெளியிடும் என்று தேதியை அறிவித்துள்ளதால், இது பற்றிய தகவல்களை நாம் தெரிந்துகொள்ள நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை, அதேபோல் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் இந்த புதிய சாதனம் சேர்க்கப்படும் என்பது தெளிவாகிறது.
சியோமி ரோபோ வேக்கம் கிளீனர் சாதனம் தற்போதைய சூழலில் பெரிய அளவில் வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் வெளியீடு ஏப்ரல் 18 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், ஊரடங்கு காரணமாக இதன் விற்பனை அடுத்த மாதேம் துவங்கும் என்றும் கூறப்படுகின்றது.
மேலும், சியோமி ரோபோ வேக்கம் கிளீனர் குறித்த விவரங்களை நாளை வெளியானதும் பார்க்கலாம்.