கொரோனா வைரஸ் சீனாவில் டிசம்பர் மாதம் உருவான நிலையில், 3000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கியதோடு இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளையும் உலுக்கி வருகிறது.
அதிலும் இத்தாலி சீனாவினைத் தாண்டிய அளவில் உயிர்களைப் பறிகொடுத்து வருகின்றது, ஏறக்குறைய 3 மாதங்களைக் கடந்தநிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கால் பதித்துள்ளது.
இந்தியாவில் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமை தீவிரமானதன் காரணமாக, இந்திய அரசு மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை 144 தடைஉத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

மருத்துவமனையில் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
அதாவது கொரோனா நோயாளிகளுக்கு தண்ணீர், உணவு மாத்திரை மருந்து போன்றவைகள் போன்றவற்றினை வழங்குவதற்கு ரோபோக்களை ஈடுபடுத்த உள்ளதாக திட்டமிட்டு உள்ளனர்.
இந்த ரோபோக்கள் நோயாளிகளின் அறைகளுக்கு சென்றதும் ஒலி எழுப்பும். ரோபோவிடம் இருந்து மருந்து மற்றும் உணவினை நோயாளிகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ரோபோக்களில் பொருத்தப்பட்டிருக்கும் வீடியோ மூலம் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அறிவுரைகளை வழங்குவர்.
இந்த ரோபோக்களை அவ்வப்போது சானிடைசர் மூலம் சுத்தம் செய்வார்கள்.