Gadgets

காமெடி பண்ணுதல், நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்தல் எனக் கலக்கும் ரோபோ!

இந்த உலகம் செயற்கை நுண்ணறிவினை நோக்கி விறுவிறுவென பயணித்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் 20 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு உலகினை முழுவதுமாக ஆக்ரமித்து விடும்.

தற்போது அதற்கான ஆராய்ச்சிகள் பல்வேறு வகைகளில் நடைபெற்று வருகிறது, அந்த வகையில் தற்போது சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு பெண் ரோபோவினைக் கண்டுபிடித்து உள்ளார்.

காமெடி பண்ணுதல், நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்தல் எனக் கலக்கும் ரோபோ!

தமிழ்நாட்டில் நீட் தேர்வினை எதிர்கொள்ள முடியாமல் பல மாணவர்கள் திணறி வருகின்றனர், தற்போது அவர்களுக்கு ஒரு பெரிய தீர்வாக இந்த ரோபோ அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கெனித் ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி, புதிய பெண் ரோபோ ஒன்றை வடிவமைத்து உள்ளார். அதாவது இந்த ரோபோவானது, நீட் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் பயிற்சியினை வழங்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

ரெக்கார்டு செய்த வகையாக வகுப்புகளை எடுக்காமல், மாணவர்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்து வைக்கிறது.

ரூ.5,00,000 ரூபாயில் உருவாக்கப்பட்ட இந்த ரோபோவானது, வேடிக்கையாக பேசக் கூடியதாக இருப்பது கூடுதலான சிறப்பாக உள்ளது.

Related posts

நாளை முன்பதிவினைத் துவக்கும் அமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்!!

TechNews Tamil

அறிமுகமானது டெல் லேட்டிடியூட் 9510 லேப்டாப்!!

TechNews Tamil

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் கோ லேப்டாப்!

TechNews Tamil