2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி ஆகும், இந்த செயலியானது மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற ஒரு செயலியாக இருந்துவருகிறது.
டிக் டாக் செயலியானது சீனாவினைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 70 கோடி பயனர்களைக் கொண்டு, மிகக் குறுகிய காலத்தில் பலரால் பயன்படுத்தப்பட்டுவரும் செயலியாக இருந்து வருகிறது.
இளைஞர்களை மட்டுமன்றி சாதாரண குடும்ப உறுப்பினர்களையும் பயன்படுத்த தூண்டுவிதமாக இந்த செயலி அமைந்துள்ளது. இந்த செயலியானது ஆபாசங்களைப் பரப்புவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்க, டிக் டாக்கிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

பின்னர் அது மீண்டும் திருத்தப்பட்டு சில விதிமுறைகளுடன் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. டிக்டாக்கை உருவாக்கிய பைட்டான்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு செயலியை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது இந்த செயலி, பல வகையான பாடல்களை சேகரித்து வைத்திருக்கும் செயலியாக உள்ளது.
தற்போது இது இந்தியாவில் சோதனை முறைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்து இந்த செயலி இந்தோனேஷியாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.