பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி இளைஞர்கள், அலுவலகத்தில் வேலைபார்ப்போர் என அனைத்து வயதினரும் பயன்படுத்திவரும் கேமிங்க்கான ரெசிடண்ட் ஈவில் சீரிஸ் சர்வதேச அளவில் பத்து கோடிக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீடியோ கேமிங்கினை நாள் பகல் பாராது, அனைவரும் விளையாடிவரும் நிலையில் ஜப்பானை சேர்ந்த வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனமான கேப்காம், தனது ரெசிடண்ட் ஈவில் சீரிஸ் விற்பனை தாறுமாறாக உள்ளதாகக் கூறியுள்ளது. அதாவது 1996 ஆம் ஆண்டு துவங்கிய ரெசிடண்ட் ஈவில் சீரிஸ் 24 ஆண்டுகளில், மிகப்பெரும் சாதனையினை செய்துள்ளது.
கேப்காம் நிறுவனம் இன்று பல வகையான வீடியோ கேம் ஆப்களை வெளியிட்டாலும், இதுபோல் ஒரு சாதனையை செய்த சிறந்த கேமாக ரெசிடண்ட் ஈவில் உள்ளது. துவக்கத்தில் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற நிலையில், உடனடியாக அடுத்தடுத்த சீரிஸ்களை வெளியிட்டே இந்த சாதனைகளை செய்துள்ளது.
ஜப்பான் நிறுவனத்தின் இந்த கேம், ஜப்பானில் 20 சதவீதப் பயன்பாட்டிலும் மீதமுள்ள 80 சதவீதப் பயன்பாடு மற்ற நாடுகளிலும் உள்ளது. ரெசிடண்ட் ஈவில் சீரிஸ் பத்து கோடிக்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளதாதால் கேப்காம் இதனைக் கொண்டாடியுள்ளது.