Mobile

விரைவில் களம் இறங்கத் தயாராகி வரும் ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

இந்தியாவில் விரைவில் ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.55′ இன்ச் 2400 × 1080 பிக்சல் கொண்ட வளைந்த கர்வுடு OLED டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை மாலி-ஜி 77 எம்சி 9 ஜி.பீ.யு மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை இது கலர்ஓஎஸ் 11.1 உடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

விரைவில் களம் இறங்கத் தயாராகி வரும் ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 2  மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்சல் மோனோ போர்ட்ரெய்ட் லென்ஸ் போன்றவற்றினையும் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 65W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் 4350 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன்!!

TechNews Tamil

சீனாவில் வெளியாகிய விவோ எஸ்10 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil