டிக்டாக் செயலியில் பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவம் சரி என்பதுபோல் வீடியோ ஒன்று வெளியாக, டிக் டாக் செயலியினை அன் இன்ஸ்டால் செய்தும் வருகின்றனர்.
இந்தநிலையில் மித்ரன் என்ற செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிக அளவில் டவுண்ட்லோடு செய்யப்பட்டு வருவதாக கூறப்பட்டது, அதாவது டிக் டாக் போன்றே அனைத்து அம்சங்களையும் கொண்ட இந்த செயலி விரைவில் டிக் டாக்கின் இடத்தினைப் பிடித்துவிடும் என்று கூறப்பட்டு வந்தது.
அதாவது ஒரே மாதத்தில் இந்த மித்ரன் செயலியினை 50 லட்சம்பேர் டவுண்ட்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது இந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த மித்ரன் செயலி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி கிடையாது என்றும், பாகிஸ்தான் மென்பொருன் டெவெலப்பரான க்யூபாக்சஸிடமிருந்து வாங்கப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் மிட்ரான் ஆப்பிற்கு எந்தவிதமான தனியுரிமைக் கொள்கையும் இல்லை என்பதாலும், மேலும் இந்த செயலி மிகவும் தரமற்றதாக உள்ளதாகக் கருத்தப்படுவதாலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூகுள் தளமோ, மிட்ரான் செயலியோ விளக்கம் அளிக்கும் என எதிர்பார்த்த நிலையில் எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை.