Apps

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ள Remove China Apps!!

இந்தியா மற்றும் சீனா எல்லையில் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் போர் அபாயம் ஏற்படுமோ என்ற பயம் இருநாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள மக்களிடையே நிலவி வருகின்றது. ஏற்கனவே சீனா ஏற்படுத்திய கொரோனாவால் இந்தியா படாதபாடு பட்டுவரும் நிலையில், எல்லைப் பிரச்சினையாலும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றது.

இதனால் இந்தியாவில் உள்ள ஒரு ஐடி நிறுவனமானது ஸ்மார்ட்போனிலிருந்து சீன ஆப்ஸ்களை நீக்க உதவும் ஒரு அருமையான ஆப் வசதியை உருவாக்கியுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ள Remove China Apps!!

அதாவது ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து சீன ஆப்களையும் இந்த ஒரே ஆப் மூலம் டெலிட் செய்யலாம். இந்த ஆப் தற்போதுவரை 1மில்லியன் பதிவிறக்கத்தைப் பெற்றுள்ளது.

ஆனால் இந்த Remove China Apps கூகுள் நிறுவனத்தின் கொள்கையை மீறியதால் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கையினை அது பாதிப்பதாக கருதிய கூகுள் நிறுவனம் இம்முடிவினை எடுத்ததுடன் அதனை அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது.

இந்திய- சீனா பிரச்சினையால் சீன தயாரிப்புகளை தவிர்க்குமாறு இந்திய கல்வியாளர் சோனம் வாங்சு கோரியதை அடுத்து, பொதுமக்கள் பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்துவர சீன வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

டிக் டாக் நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம்!!

TechNews Tamil

அறிமுகமானது ஓலாவின் பைக் சேவை!

TechNews Tamil

கொரானோ வைரஸ் குறித்த போலித் தகவல்களை நீக்க முடிவு எடுத்துள்ள ஃபேஸ்புக்!!

TechNews Tamil