Information Technology

ரூ.500 கோடி நிதியுதவி… தனியார் மருத்துவமனை, 50 லட்சம் இலவச உணவுகள்… கொரோனா நன்கொடையாக வாரி வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்!!

கொரோனா வைரஸ் உலகின் சாதாரண நிலையினை புரட்டிப்போட்டுள்ளது. வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த ஊரடங்கு உத்தரவானது மார்ச் 24 ஆம் தேதி முதல், ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இரட்டை இலக்கங்களில் இருந்த கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது தற்போது 1251 ஆக உள்ளது.

பெறுநிறுவன ஊழியர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமாப் பிரபலங்கள் எனப் பலரும் பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

ரூ.500 கோடி நிதியுதவி… தனியார் மருத்துவமனை, 50 லட்சம் இலவச உணவுகள்… கொரோனா நன்கொடையாக வாரி வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்!!

அந்த வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 500 கோடியினை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாய் அறிவித்துள்ளது.  கூடுதலாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு தலா ரூ.5 கோடியும் வழங்குவதாய் அறிவித்துள்ளது.

ஊரடங்கு முடியும் வரை சுமார் 50 லட்சம் இலவச உணவுகள் வழங்குதல், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் உருவாக்குதல் போன்றவற்றையும் வழங்குகிறது.

சுகாதாரப் பணியாளர்களுக்கு 1 லட்சம் மாஸ்க்குகள், ஆம்புலன்ஸுகளுக்கு இலவசமாக எரிபொருட்கள் போன்றவற்றினை வழங்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.

Related posts

பி.எஸ்.என்.எல்.லுக்கு வந்த புது சோதனை…!!

TechNews Tamil

ஆஃபர்களை அள்ளித்தரும் ஏர்டெல்!!!

TechNews Tamil

ஆறு மாதங்களுக்கு இலவசமாக டாடா ஸ்கை அறிவித்த திட்டம்!

TechNews Tamil