Information Technology

மோட்டோரோலா ரேசர் சாதனத்திற்கு 4,999 ரூபாய்க்கு சலுகைகளை அறிவித்துள்ள ஜியோ!!

மோட்டோரோலா ரேசர் சாதனம் 2020 கடந்தமாதம் அறிமுகமானது, இந்த ஸ்மார்ட்போன் அனைத்து ஆன்லைன் ஸ்டோர்களில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஏப்ரல் 15 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

ஆனால் நாளை திட்டமிட்டபடி, ரிலையன்ஸ் டிஜிட்டல் கிளைகளில் மோட்டோரோலா ரேசர் சாதனத்தின் விற்பனை துவங்கும் என்று மோட்டோரோலா நிறுவனத்தின் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1.   மோட்டோரோலா ரேசர் சாதனத்தின் இந்திய விலை- ரூ.1,08,230

இந்த போன் விற்பனைக்கு வரும்போது சிம்கார்டு இல்லாமல் இசிம் சேவையுடன் வருகிறது. இசிம் சேவையினை மோட்டோரோலா ரேசர் சாதனத்திற்கு ஜியோ வழங்குகிறது.

மோட்டோரோலா ரேசர் சாதனத்திற்கு 4,999 ரூபாய்க்கு சலுகைகளை அறிவித்துள்ள ஜியோ!!

இசிம் சலுகையாக சில ஆஃபர்களை ஜியோ அறிவித்துள்ளது, அதாவது இந்த போன் விற்பனையின்போது, 4,999 ரூபாய்க்கு ஜியோவின் டபுள் டேட்டா, டபுள் வேலிடிட்டி பிளான் போன்றவற்றினை வழங்குகிறது.

அத்துடன் இரண்டு வருட காலத்திற்கு பலவகையான சலுகைகளை ஜியோ வழங்குகிறது, அதாவது நிபந்தனையில்லாமல் அன்லிமிடெட் சேவையாக முதல் வருடத்திற்கு 350 ஜிபி அதிவேக டேட்டாவினையும், இரண்டாவது வருடத்திற்கு அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 700 ஜிபி டேட்டாவினை நிபந்தனைகளுடன் வழங்குகிறது.


Related posts

சந்திரயான் 2 ஏவுதலை நேரில் இருந்து பார்க்க முன்பதிவு ஆரம்பம்!!

TechNews Tamil

‘ஈசிஜி மெஷின் இனி தேவையில்லை- ஆப்பிள் வாட்ச் போதும்..

TechNews Tamil

ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வித்தியாசமான பாராட்டினைத் தெரிவித்த கூகுள் தேடல்!!

TechNews Tamil