விவோ நிறுவனம் Vivo S5 ஸ்மார்ட்போனை நவம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று வெய்போவில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த டீசர் வெளியானது, ஆனால் இந்த டீசரில் வேறு எந்த விவரங்களும்இல்லை.
இந்த ஸ்மார்ட்போன் விவோ நவம்பர் 14 ஆம் தேதி அன்று வெளியாகும், அதற்கு முன்பு ஸ்மார்ட்போன் குறித்த மற்றுமொரு டீசர் வெளியாகும் என்று தெரிகிறது.
- Vivo S1-ன் ஆரம்ப விலை – ரூ. 16,990

தற்போது வரை கிடைத்துள்ள தகவலின்படி இது மூன்று உள்ளடக்க சேமிப்பினைக் கொண்டதாக வெளிவரும். இந்த ஸ்மார்ட்போன் Android 9.0 அடிப்படையிலான FunTouch OS 9.0 கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
மேலும் இது 6.38 இஞ்ச் full-HD உடன் 1080×2340 பிக்சல்கள் Super AMOLED டிஸ்பிளே கொண்டதாக உள்ளது.
இது 4,500mAh பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. இந்த போன் 4GB RAM, 128GB உள்ளடக்க மெமரி, 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா போன்றவை இருக்கும் என்று தெரிகிறது.