Mobile

வெளியானது சியோமி 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி

சியோமி புதிய Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய எதிர்பார்ப்புகள் நிலவிய வண்ணமே உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் அதன் ஸ்மார்ட்டர் லிவிங் 2020 நிகழ்ச்சியில், 4 புதிய மி டிவி மாடல்களை அறிவித்துள்ளது.

இத்துடன் கூடுதலாக, Mi 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று கூறப்பட்டது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில தகவல்கள் கசிந்துள்ளன.

வெளியானது சியோமி 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி

இந்த ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் 1080×2280 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டிருக்கும், அத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6

மற்றும் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் 7என்.எம். பிராசஸர் ஆகியவையும் அடங்கும்.

6 ஜி.பி. / 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம் அளவிலான மெமரியினையும், 128 ஜி.பி. / 256 ஜி.பி. / 512 ஜி.பி. அளவிலான மெமரியினையும் கொண்டு உள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டதாக உள்ளது, மேலும் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ், போன்றவையும் இதில் அடக்கம்.

12 எம்.பி. 1/3.6″ சாம்சங் S5K3M5, f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ், 16 எம்.பி. 1/1.3″ சோனி IMX481 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ், 4cm மேக்ரோ, 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 0.9μm பிக்சல், f/2.0 போன்றவையும் இதில் அடங்கும்.

அதிலும் மிகச் சிறந்த அம்சமாக இதுவரை இல்லாத வகையில், நான்கு வித சார்ஜிங் வசதிகளை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

Related posts

இன்று முதல் விற்பனை ஆரம்பமாகும் ரெட்மி கே20, ரெட்மி கே20 ப்ரோ!

TechNews Tamil

புதிய அப்டேட்டுடன் களம் இறங்கியுள்ள ரியல்மி சி3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஹூவாய் போனை பயன்படுத்தும் ஒன் பிளஸ் விளம்பர தூதர்!

TechNews Tamil