சியோமி நிறுவனம் மி மிக்ஸ் 4 என்ற தனது ஸ்மார்ட்போனை செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியிட உள்ளது.
மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் 108 எம்பி கேமராவுடன், 16 எம்பி அளவிலான அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 12 எம்பி அளவிலான பெரிஸ்கோப் கேமரா ஆகியவைகளும் இதில் உள்ளது, இது 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் திறனை கொண்டிருக்கும்.
மி மிக்ஸ் 4 12 ஜிபி அளவிலான ரேம் கொண்டிருக்கும். ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கும். மேலும் இது ஸ்னாப்டிராகன் 855+ மற்றும் நிலையான ஸ்னாப்டிராகன் 855 என்கிற இரண்டு பதிப்புகளில் வெளியாக உள்ளது.

இது ஆண்ட்ராய்டு 10 உடனான சமீபத்திய எம்ஐயுஐ 11 மென்பொருளின் கீழ் இயங்கும். இந்த ஓஎஸ் புதிய மி மிக்ஸ் 4 உடன் செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியிடப்படும்.
இதுகுறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்த வண்ணமே உள்ளது, விலை நிர்ணயம்
பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.