ஒப்போ நிறுவனம் ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் விலை- இந்திய மதிப்பில் ரூ.27,030
ஒப்போ ஏ92எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.57 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800 5ஜி சிப்செட் வசதி கொண்டுள்ளது.
மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஒப்போ ஏ92எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சமாக்= கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை ஒப்போ ஏ92எக்ஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. பேட்டரி அளவினைப் பொறுத்தவரை ஏ92எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஒப்போ ஏ92எக்ஸ் 5 ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் /க்ளோனாஸ் / பீடோஇ யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.