சியோமி நிறுவனம் தனது சியோமி மி 10 ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்ததையடுத்து, மார்ச் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வெளியீடானது
தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 இந்திய விலை- ரூ.40,920
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 இந்திய விலை- ரூ.43,990
- 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி 10 இந்திய விலை- ரூ.48,080
இந்த சியோமி மி 10 குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம், இந்த சியோமி மி 10 ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED எச்டிஆர் பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 650ஜிபியு வசதியினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை இந்த சியோமி மி 10 ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் 108எம்பி மெயின் கேமரா, 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி சென்சார், 2எம்பி சென்சார் என நான்கு கேமராக்களைக் கொண்டுள்ளது, முன்புறத்தில் 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
இந்த சியோமி மி10 ஸ்மார்ட்போன் ஆனது 4780எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.1111 ax (2.4GHz + 5GHz) 8 x / MU-MIMO, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் (எல் 1 + எல் 5), என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.