மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டம் தான் இப்போதைய லேட்டஸ்ட் வெர்ஷன் ஆகும். இதில் மேம்பட்ட அம்சங்கள் இருந்தாலும், விண்டோஸ் 7 போல், எதுவும் பெரிதளவில் பேசப்படவில்லை.
இப்போதும் பெரும்பாலான பயனாளர்கள் விண்டோஸ் 7 ஆபரேட்டிங்
சிஸ்டத்தையே விரும்புகின்றனர். மற்ற அனைத்தையும்விட, இது பயன்படுத்துவதற்கு
எளிதாகவும் உள்ளது.
இந்த நிலையில், கடந்த ஒரு
வாரமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஃபேஸ்புக், டுவிட்டர்
உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் ‘விண்டோஸ் 1.0’ ஆபரேட்டிங் சிஸ்டம் தொடர்பான
பதிவுகளை பதிவிட்டது. அதில், ‘எம்.எஸ் டாஸ், கிளாக்
உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் விண்டோஸ் 1.0 அறிமுகமாகிறது’ என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்டோஸ் 1.0 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டால், என்னென்ன விளம்பரங்கள் செய்யப்படுமோ அதே போன்று டுவிட்டர் பதிவுகள் அமைந்துள்ளது.
34 வருடங்களுக்குப் பிறகு, இதைப்
பற்றி விண்டோஸ் நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டு வருகிறது. இதற்கான காரணம்
குறித்து முழுமையான விபரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், விண்டோஸ்
நிறுவனத்தின் டுவிட்டர் பதிவுகளைப் பார்க்கும் போது, புதிய
பொலிவுடன் மீண்டும் விண்டோஸ் 1.0 அறிமுகம் செய்யப்படலாம் என்று
கூறப்படுகிறது.
ஒரு வேளை
மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘விண்டோஸ் 1.0’ என்ற பெயரில் வீடியோ கேம்
அல்லது விண்டோஸ் 11 ஆபரேட்டிங் சிஸ்டம் அறிமுகம்
செய்வதற்கான அடையாளம்தான் இது என்று கூறப்படுகிறது.