கொரோனா வைரஸ் தொற்றானது உலகின் நிலையினை நிலைகுலையச் செய்துள்ளது, உலக நாடுகள் பலவும் கொரோனாவுக்கு எதிராக கடுமையாகப் போராடி வருகின்றது. இந்த வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவர உலகின் பல நாடுகளில் ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்று பரவாமல் தடுக்க, சிறு குறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள்வரை எதுவும் இயங்காமல் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையனஸ் நிறுவனம் அதன் பெரும்பாலான ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவிகிதம் வரை குறைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தற்போதைக்கு ஊதியம் அனைத்தையும் கைவிட உள்ளதாகவும், முதல் காலாண்டில் பொதுவாக செலுத்தப்படும் வருடாந்திர ரொக்க போனஸ் மற்றும் செயல்திறன் மற்றும்
இணைக்கப்பட்ட சலுகைகள் ஒத்தி வைக்கபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ரூ.15 லட்சத்துக்கும் குறைவான வருமானம் பெரும் ஊழியர்களுக்கு இழப்பீடு இருக்காது என்றும் கூறியுள்ளார். மேலும் நிலைமையினை வெகு விரைவில் சீராக்கி, நாம் இந்தநிலையில் இருந்தும் மீண்டு வருவோம்” என்று ஊழியர்களுக்கு அம்பானி கடிதம் எழுதியுள்ளார்.