இந்தியாவில் ஒப்போ அதிரடியாக அதன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது, அந்த வகையில் இறுதியாக சமீபத்தில் வெளியான ஒப்போ ஏ9 2020 மற்றும் ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன்கள் மிகச் சிறப்பான வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இந்த அறிமுகத்தை தொடர்ந்து, பல ஓப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடியான விலை குறைப்பினை அறிவித்துள்ளது. அதாவது ஏ1கே ஸ்மார்ட்போன் விலை ரூ. 500 குறைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் கூடுதலாக, மற்ற 2 போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது, அதாவது ஒப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன், 2 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மாடல் தற்போது ரூ. 7,490 என்ற விலைக்கு விற்பனை ஆகிக் கொண்டு உள்ளது. இதற்கு முன்பே இதன் விலையில் ரூ. 500 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. என்ற மெமரி அளவினைக் கொண்டு அறிமுகமான ஒப்போ எஃப்11 மாடலானது ஏற்கனவே ரூ. 16,990 க்கு விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. தற்போது இது ரூ. 2000 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ. 14,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது.