ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மிபுக் ஏர் 13 லேப்டாப் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ரெட்மிபுக் ஏர் 13 மாடல் லேப்டாப் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
அதாவது ரெட்மிபுக் ஏர் 13 லேப்டாப் 13 இன்ச்முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாகவும், மேலும் 2560 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது டிசி டிம்மிங் வசதியினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது 300nits பிரைட்நஸ் வசதியை கொண்டதாக உள்ளது, மேலும் இந்த புதிய லேப்டாப் மாடல் ஆனது 10-வது தலைமுறை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த லேப்டாப் ஆனது 4.5ஜிகாஹெர்ட்ஸ் டர்போ பூஸ்ட் கொண்டுள்ளது, இந்த லேப்டாப் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்குவதாக உள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை ரெட்மிபுக் ஏர் 13 மாடல் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.
பேட்டரி அளவினைப் பொறுத்தவரை ரெட்மிபுக் ஏர் 13 மாடல் இயங்குவதாகவும், மேலும் சியோமி 65W யூ.எஸ்.பி-சி அடாப்டரை கொண்டதாகவும் உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 6, புளூடூத் 5.1, இரண்டு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.