சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி, அதன் முதல் ஸ்மார்ட் டிவியை வெளியிட தயாராக உள்ளது.
ரெட்மி டிவி வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும். இது 70 இன்ச் ஸ்மார்ட் டிவியாக இருக்கும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

சியோமி தற்போது சீனாவில் 75 இன்ச் மி டிவி மாடல்களை, தோராயமாக ரூ.52,000/-க்கு விற்பனை செய்து வருகிறது. ஆக, வெளியாகப்போகும் ரெட்மி டிவியானது சற்று சிறிய அளவிலான டிஸ்ப்ளே கொண்ட வரவுள்ளதால், அதன் விலையும் சற்று குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
சியோமியின் ஸ்மார்ட் டிவிகளைப் போலவே, வரவிருக்கும் ரெட்மி டிவியும் பேட்ச்வால் யுஐ கொண்டு இயங்கும். மேலும் இது 4கே எச்டிஆர் ஆதரவு, டால்பி சவுண்ட் ஆதரவு மற்றும் தொகுக்கப்பட்ட ப்ளூடூத் வாய்ஸ் ரிமோட் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.
முதன் முதலாக ஸ்மார்ட் டிவியை வெளியிடத் திட்டமிட்டுள்ளதால், அதிக அளவிலான ஆஃபர்கள் வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது. இதனை எதிர்பார்த்து மக்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.