சீனாவின் பீஜிங் நகரில் சியோமி நிறுவனம் முதல் ரெட்மி டி.வியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது.
ரெட்மி டிவி மட்டுமின்றி இந்த அறிமுக நிகழ்வில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட ரெட்மி புக் 14 லேப்டாப் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த ரெட்மி டிவியுடன் ப்ளூடூத மூலம் இயங்கும் வாய்ஸ் ரிமோட்டையும் சியோமி நிறுவனம் அளிக்கிறது .

இந்த டிவியின் விலை ரூ.38,000 ஆகும். தற்போது சீனாவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த டிவி, சர்வதேச அளவில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
ரெட்மி டிவி சியோமியின் பேட்ச்வால் தளத்தை கொண்டே இயங்குகிறது. 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பை கொண்ட இந்த டிவி குவாட்-கோர் 64-பிட் அம்லாஜிக் எஸ்.ஓ.சி ப்ராசஸரை கொண்டே இயங்குகிறது.
டால்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ் ஹெட்.டி போன்ற ஆடியோ தொழில்நுட்பங்களை ஏற்கும் திறனையும் இந்த ரெட்மி டிவி கொண்டுள்ளது.
இணைப்பு வசதிகளை பொருத்தவரை வை-பை, ப்ளூடூத் 4.2, இரண்டு யூ.எஸ்.பி. போர்ட்கள், மூன்று ஹெச்.டி.எம்.ஐ போர்ட்கள், ஏவி இன்புட் என பல வசதிகளை கொண்டுள்ளது.