Mobile

எச்டி வசதியினைப் பெறும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்!!

அமேசான் பிரைம் வீடியோவினை எச்டி வசதியுடன் பார்க்க ரெட்மி கே 20 மற்றும் ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் கிடைத்துள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஒரு புதிய MIUI 11 புதுப்பிப்பை விரைவில் பெறப் போகிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது இந்த அறிவிப்பினை பியூனிகாவெப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, மேலும் இந்த வசதியினை பெற அமேசான் பிரைம் வீடியோக்களின் லேட்டஸ்ட் வெர்சனை டவுன்லோடு செய்ய வேண்டும். மேலும் அதில், வீடியோ தரத்தை High  என்று செட் செய்ய வேண்டும்.

ரெட்மி கே20 ப்ரோ:

6.39 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி சிப்செட் வசதியினையும் கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. 6ஜிபி/8ஜிபி ரேம் அளவினையும், 128ஜிபி/64ஜிபி மெமரி அளவினையும் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 48எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி செகன்டரி சென்சார், 8எம்பி மூன்றாம் நிலை சென்சார் போன்றவற்றினை பின்புறத்தில் கொண்டுள்ளது.

எச்டி வசதியினைப் பெறும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்!!

முன்புறத்தில் 20எம்பி பாப்-அப் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

ரெட்மி கே20 அம்சங்கள்

6.39 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினையும், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 எஸ்ஒசி சிப்செட் வசதியினையும் கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. 4ஜிபி/6ஜிபி ரேம் அளவினையும், 128ஜிபி/64ஜிபி மெமரி அளவினையும் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 48எம்பி பிரைமரி சென்சார், 13எம்பி செகன்டரி சென்சார், 8எம்பி மூன்றாம் நிலை சென்சார் போன்றவற்றினை பின்புறத்தில் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 20எம்பி பாப்-அப் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ப்ளூடூத் வி5.0 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

எக்சேஞ்ச் போனுக்கு ரூ.5000 வரை அறிமுக சலுகை அறிவித்துள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசத்தல் அம்சங்களுடன் Oppo A33 ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

அறிமுகமானது ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil