Mobile

பொங்கல் பண்டிகையினை ஒட்டி வெளியாகவுள்ள ரெட்மி நோட் 9டி 5ஜி ஸ்மார்ட்போன்!

ரெட்மி நிறுவனம் ஜனவரி 8 ஆம் தேதி பொங்கல் பண்டிகையினை ஒட்டி ரெட்மி நோட் 9டி 5ஜி மாடலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ரெட்மி நோட் 9டி 5 ஜி ஸ்மார்ட்போன் குறித்து தற்போது வரை கசிந்துள்ள விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி நோட் 9டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டதாக இருக்கும் என்றும் தெரிகின்றது.

மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை இது ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

பொங்கல் பண்டிகையினை ஒட்டி வெளியாகவுள்ள ரெட்மி நோட் 9டி 5ஜி ஸ்மார்ட்போன்!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 இயங்குதளம் கொண்டதாகவும் இருக்கலாம். கேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 118° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 13 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதியினைக் கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ,  வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டதாக இருக்கலாம் என்றும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் இருக்கும் என்று தெரிகின்றது. 

Related posts

சிறப்பான அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி ஏ6பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!!

TechNews Tamil

நாளை முதல் விற்பனைக்கு வருகிறது சாம்சங் கேலக்ஸி இசட்!!

TechNews Tamil