Mobile

வெளியானது ரெட்மி நோட் 9எஸ் ஸ்மார்ட்போன் மாடல்!

சியோமி நிறுவனம் தற்போது ரெட்மி நோட் 9 எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 7 ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரெட்மி நோட் 9எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது, 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

 பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதி உடன் அட்ரினோ 618ஜபியு ஆதரவைக் கொண்டுள்ளது.

வெளியானது ரெட்மி நோட் 9எஸ் ஸ்மார்ட்போன் மாடல்!

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியினையும், 4ஜிபி/6ஜிபி ரேம் வசதியினையும் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் 48எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ராடு வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 25எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இது, கைரேகை சென்சார் மற்றும் இன்ஃராரெட் சென்சார் கொண்டுள்ளது.

இது 5020எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ரெட்மி நோட் 9எஸ் ஸ்மார்ட்போன் 4ஜி வோல்டிஇ, 3 ஜிஇ வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

Samsung Galaxy A70s ஸ்மார்ட்போனுக்கு இப்படி ஒரு அப்டேட்!!

TechNews Tamil

தங்கம், வைரத்தினால் செய்யப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ

TechNews Tamil

சர்வதேச சந்தையில் களமிறங்கிய லாவா பியூ ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil